இடஒதுக்கீடு அமல் - 3
உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு மூன்று கட்டங்களில் நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறப்படும் நிலையில், சற்று பின்னோக்கிப் பார்ப்போம். ஐஐடிகளில் 1973-இல் (டோண்டுவை பொருத்தவரை, சமீபத்தில்!) SC / ST மாணவர்களுக்கு 22.5% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தபோது , JEE தேர்வில் பத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கும், Chandy கமிட்டியின் பரிந்துரைப்படி, சீட்டுக்கள் வழங்கப்பட்டன. அவர்களில் எல்லோருமே, பின் தங்கிய கிராமங்களிலிருந்து, நூலகமோ, ஆய்வுக்கூடமோ இல்லாத தரமற்ற பள்ளிகளில் படித்தவர்கள். அனைவருமே பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர் என்பதைக் கூறத் தேவையில்லை ! அம்மாணவர்களை (அடுத்த ஆண்டுக்கான) முதலாண்டு பொறியியற் கல்விக்கு தயார்படுத்த வேண்டி, ஒரு வருட தனிப்பயிற்சி ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஒரு வருடத்திலேயே அம்மாணவர்களில் பலர் வெளியேறி விட்டனர். மிச்சமிருந்தவர், ஐஐடிகளில் அனுமதிக்கப்பட்டு, படாத பாடு பட்டனர். இறுதியில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகச்சிலரே பட்டப் படிப்பை முடித்தனர் !
மேற்கூறியதை வைத்துப் பார்க்கும்போது, இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு அரசின் கடமை முடிந்து விடுகிறதா என்ற கேள்வி எழுகிறது ! இது போல கல்லூரி படிப்பை முடிக்காமல் வெளியேறும் தலித் மாணவர்களை அரசு துளியும் கண்டு கொள்வதில்லை. மேலும், ஐஐடிகளிலும் இன்னும் சில கல்லூரிகளிலும், விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய சூழலில், அரசு அப்போது நிர்ணயித்திருந்த (இலவச வசதி பெறுவதற்கான) வருவாய் வரம்பு மிகக் குறைவானதாக இருந்ததால், மிகச்சிலரே இலவசக் கல்விக்கு தகுதி பெற்றவராய் இருந்தனர் ! மற்ற மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு என்பது அவர்கள் வாழ்வில், எல்லா வகையிலும் பெரும் போராட்டம் தான் ! இச்சூழலில், ஒரு தலித் மாணவர் கூட, இதுவரை பொதுப்பிரிவில், சீட் பெறவில்லை என்பது தான் சுடும் உண்மை !!! அதாவது, பொதுப்பிரிவிலுள்ள சீட்டுகளை ஒதுக்கப்பட்டவர் எடுத்துக் கொள்கின்றனர் என்று பொத்தாம் பொதுவாகக் கூறுவது சரியில்லை.
சீட்டுகளின் எண்ணிக்கையை (பொதுப்பிரிவு பாதிக்காத வகையில்!) உயர்த்துவதோ, ஆசிரியர்களின் சம்பளத்தை / ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதோ இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பது நிதர்சனம். ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நுழைபவர்களின் (அறிவியல், கணிதம் போன்றவற்றில்) அடிப்படை அறிவு பலமாக இருத்தல் அவசியம். அதனாலேயே, எட்டாவது வகுப்பிலிருந்தே, பின் தங்கிய கிராமப்புறச் சூழலிலிருந்து வரும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி தருவதும் அவசியமாகிறது.
"கல்வி ஓர் அடிப்படை உரிமை" என்பதை உணரவே, சுதந்திரத்திற்குப் பின், நமக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்படியும், எந்த அரசும், இதற்காக, உருப்படியாக எதையும் செய்ய முன் வரவில்லை. அடிப்படைக் கல்வியின் (Primary/Secondary education) தரத்தை மேம்படுத்த பைசா செலவழிக்க விரும்பாத அரசு, மாறாக, "உயர்" கல்விக்காக (சீட்டுகளை அதிகப்படுத்துவதன் தொடர்ச்சியாக!) ஆயிரமாயிரம் கோடிகளை இறைக்க தயாராக உள்ளது பெரிய கேலிக் கூத்து ! இந்த அணுகுமுறை சரியானதா / பலன் தருமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாய் தொக்கி நிற்கிறது ?
படிக்க விரும்பும் எல்லாருக்கும் கல்வி வாய்ப்பு அளிக்க வல்ல சூழலை அரசால், மிக நிச்சயமாக உருவாக்க இயலும். ஆனால், அதற்கு, அரசு தன் வருவாயை (பணக்காரர்களுக்கு சலுகைகள் வழங்குவதையும், பெரு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிப்பதையும் நிறுத்திக் கொண்டு) பெருக்கிக் கொள்வதும் அவசியமாகிறது !
என்றென்றும் அன்புடன்
பாலா
14 மறுமொழிகள்:
//சற்று பின்னோக்கிப் பார்ப்போம். ஐஐடிகளில் 1973-இல் (டோண்டுவை பொருத்தவரை, சமீபத்தில்!) SC / ST மாணவர்களுக்கு 22.5% இடஒதுக்கீடு அமலுக்கு வந்தபோது , JEE தேர்வில் பத்துக்கும் குறைவான மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கும், Chandy கமிட்டியின் பரிந்துரைப்படி,
//
பின்னோக்கி பார்ப்பது இருக்கட்டும், இன்றைய நிலை என்ன? இப்போதும் ஒன்றுமே தெரியாது மக்குகளை இட ஒதுக்கீட்டில் சேர்ப்பதில்லை, சூழல் குடும்ப சூழல், மற்றைய சூழல்களினால் உயர்சாதி மாணவர்களுக்கு கிடக்கும் அந்த எக்ஸ்ட்ரா மதிப்பெண்கள் இருக்கு பார்த்தீர்களா அதை சமன் செய்யவே இடஒதுக்கீடு, இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் மருத்துவர்களில் 20% மேற்பட்டவர்கள் SC/STகள், 50% மருத்துவர்கள் பிற்பட்ட மிக பிற்பட்டவர்கள், வெறும் 30% மட்டுமே இதர, அதிலும் BC,MBC,SC,ST கள் உண்டு இப்படி பார்த்தால் இன்றைய நிலையில் எத்தனை கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மாணவர்கள் படிப்பை முடிக்கவில்லை, ஆனால் நீங்கள் 25 ஆண்டுகளுக்கு முந்தைய கதையை பேசுகிறீர்கள், இது எந்த காரணத்தினாலும் எப்படியிருந்தாலும் இடஒதுக்கீடு அமல்படுத்தியே ஆகவேண்டும்
குழலி,
கருத்துக்களுக்கு நன்றி.
//பின்னோக்கி பார்ப்பது இருக்கட்டும், இன்றைய நிலை என்ன? இப்போதும் ஒன்றுமே தெரியாது மக்குகளை இட ஒதுக்கீட்டில் சேர்ப்பதில்லை,
//
நான் சொல்ல வந்தது வேறு. 1973-இல் அவ்வாறு செய்தது தவறு என்பதில்லை என் கருத்து ! இடஒதுக்கீடு மட்டுமே ஒரு தீர்வாகாது, இன்னும் என்ன செய்ய முனைய வேண்டும் என்ற ஒரு பார்வையே இப்பதிவு ! இதன் அடுத்த பகுதி சீக்கிரம் வரும் !
எ.அ.பாலா
"சூழல் குடும்ப சூழல், மற்றைய சூழல்களினால் உயர்சாதி மாணவர்களுக்கு கிடக்கும் அந்த எக்ஸ்ட்ரா மதிப்பெண்கள் இருக்கு பார்த்தீர்களா..."
அதே எக்ஸ்ட்ரா மதிப்பெண்கள் க்ரீமி லேயரில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சாதிகளில் இருப்பவர்கள் தங்கள் சாதிக்கான ரிசர்வேஷனில் அதிக இடம் பிடிப்பதை எப்போது சமன்படுத்துவது?
இப்போது அவர்களில் பலர் கான்வெண்டுகளில், மேட்டர் டே பள்ளிகள் ஆகியவற்றில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து மிக நல்ல படிப்பளிக்கின்றனர். அவர்கள் வந்து மேல் படிப்பு இட ஒதுக்கீடுகளில் கணிசமான பங்குகளை ஏன் அள்ளிச் செல்ல வேண்டும்?
அவர்களாக அதை விட்டுக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியாதுதான். ஆகவே கிரீமி லேயர் நீக்கம் வெளியிலிருந்துதான் வர இயலும்.
இந்த இட ஒதுக்கீடு என்பதே மிகக் குறுகிய கால அளவுக்குத்தான் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. அதுவும் முக்கியமாக லோக் சபா மற்றும் சட்ட சபைகளுக்காக என்று அறிகிறேன். அது இப்போது மெதுவாக வேர் விட்டு இந்த அளவுக்கு நிற்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அதே எக்ஸ்ட்ரா மதிப்பெண்கள் க்ரீமி லேயரில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சாதிகளில் இருப்பவர்கள் தங்கள் சாதிக்கான ரிசர்வேஷனில் அதிக இடம் பிடிப்பதை எப்போது சமன்படுத்துவது?
//
What you mentioned is quite true. It will be better to think on these lines than the attitude of some people asking "innocently" about the definition of creamy layer.
டோண்டுவும் நீங்களும் மீண்டும் ஒருமுறை நான் எழுதிய இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா? என்கிற பதிவை படித்து பாருங்கள், தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் பொய்களுள் ஒன்று இந்த கிரீமிலேயர் பிரச்சினை...
க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், இது தொடர்பான என்பதிவின் சுட்டி இங்கே
உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?
Kuzhali,
உங்களது "இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா" என்ற பதிவு, க்ரீமி லேயர் பொய்களை உடைக்கும் ஒரு authentic document என்று எண்ணிக் கொள்ள உங்களுக்கு உரிமை இருக்கிறது.
open competition-இல் க்ரீமி லேயரை வரையறுப்பது பற்றி நீங்கள் கூறியிருப்பது கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் உயர்சாதி மாணவருக்கு ஒரு 2-3% இடஒதுக்கீடு கொடுப்பது (அதாவது, 69% disturb செய்யாமல்!) உங்களுக்கு ஒப்புதலா என்று தெரியவில்லை ! அதென்ன, க்ரீமி லேயர் பரிசோதனையை உயர்சாதியினரிடமிருந்து ஆரம்பித்து ஒரு 10 வருஷங்கள் கழித்து தான், OBC க்ரீமி லேயர் பக்கம் வர வேண்டும் என்கிறீர்கள், ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தலாமே !!!!! சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும் தான் சாதி, பணக்காரர்கள் எல்லாருமே பொதுவாக ஒரு சாதி தான் !
Good Post.
நல்ல பதிவு பாலா...
ஆனா என்ன சாதிக்க என்றுதான் புரியவில்லை :))))
அப்ஸஸ்ட் மக்கள் யாரும் அவரவர் கருத்திலிருந்து மாறப் போவதில்லை .
waste of time :)))
அன்புடன்...ச.சங்கர்
க்ரீமிலேயர் என அரசாங்கம் வரையறுத்ததை கீழ்கண்ட சுட்டியில் பாருங்கள்...
http://ncbc.nic.in/html/creamylayer.htm
Son(s) daughter(s) –
(a) Persons having gross annual income of Rs. 1 lakh or above or possessing wealth above the exemption limit as prescribed in the Wealth Act for a period of three consecutive years.
அதாவது மாதத்திற்கு ரூபாய் 8,333.33 வருமானம் பெறுபவர்கள் அதாவது நாளொன்றுக்கு ரூ.277.77 வருமாணம் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டை பயன்படுத்த இயலாது.
(b) Persons in Categories I, II, III and V-A who are not disentitled to the benefit of reservation but have income from other sources of wealth which will bring them within the income/wealth criteria mentioned in (a) above.
பத்து பன்றிகள் வைத்து மேய்த்துக்கொண்டு மாதம் ரூபாய் 8,333.33 வருமானம் பெற்றால் அந்த பன்றி மேய்ப்பவனின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டில் இடம் கிடையாது.
மேற்கண்ட இதிலேயே எல்லாம் முடிந்துவிட்டதே,
க்ரீமிலேயரை எப்படி பணத்தை வைத்து வரையறுக்க இயலும்? சமூக ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தவே இந்த இடஒதுக்கீடே தவிர பொருளாதார ஏற்றதாழ்வுகளை அல்ல, பணத்தை வைத்து க்ரீமிலேயர் செய்து இடஒதுக்கீட்டில் அந்த க்ரீமிலேயரை ஒதுக்க வேண்டுமென்பவர்களுக்கு க்ரீமிலேயருக்கு குறைந்த கல்விகட்டணமுள்ள அரசு கல்விநிலையங்களில் இடமளிக்க கூடாது என்று சொல்லும் என்பது சரியான நியாயயமே...
sankar, kuzhali,
nanRi !
//பத்து பன்றிகள் வைத்து மேய்த்துக்கொண்டு மாதம் ரூபாய் 8,333.33 வருமானம் பெற்றால் அந்த பன்றி மேய்ப்பவனின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டில் இடம் கிடையாது.//
யய்ய்ய்ய்ய்ய்ய்....எங்க போனாலும் இதே பன்னி கதையா?
பன்னி மேய்ச்சு மாசா மாசம் 8333.33 வருமானம் வாங்கறவன் அதுக்கு ஆடிட்டர் வெச்சு,விற்பனை வரி நம்பர் வாங்கி,வருமானவரி ரீடர்ன் பைல் பண்றானா?ஏன்யா இப்படி உயிரை எடுக்கறீங்க?இன்கம்டாக்ஸில் 8333.33 மாச வருமானம் காட்டினா உண்மையான வருமானம் அதை விட அஞ்சு மடங்கு இருக்கும்.அதாவது குறைஞ்சது மாசத்துக்கு 50,000 வருமானம் வராம எவனும் 8333.33 கணக்குல காட்ட மாட்டான்.
மாசம் 50,000 வருமானம் இருக்கறவன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சு படிக்க வைப்பான்.ஆடிட்டர் வெச்சு வருமானவரி ஏய்க்க தெரியுது,இது தெரியாதா?இல்லை மாசம் 2000 கொடுத்து டியூஷன் வெக்க மாட்டானா?இல்லை உங்க டாக்டர் ஐயாவோட கல்லூரியிலோ,அல்லது மானமிகு வீரமணி ஐயாவின் சத்யராஜ்- குஷ்பூ நிகர்நிலை பல்கலைகழகத்திலோ காசு கட்டி சீட்டு வாங்க மாட்டானா?(பன்னி மேய்ச்ச காசு நாறுமா என்ன?அதெல்லாம் கூச்சப்படாம வாங்கிக்குவாங்க)
பன்னி கதை,பிராந்தி கடைகாரன் பொண்ணு கதை இதையே எங்க போனாலும் ஒளறிட்டிருக்காதீங்க.பன்னி கதை,நாய் கதை எழுத்தாளர் ஒருத்தர் தமிழ்மணத்துல இருக்கார்.அவரோட லிஸ்டுல நீங்களும் சேந்திடாதீங்க.அந்த பதிவுல கப்பு தாங்க முடியலை.பின்னூட்டம் போட ஆள் இல்லாம அனானி பேருல அந்த ஆளே பூந்து பின்னூட்டம் போட்டுக்கறார்.கர்மம்டா சாமி.
Anonymous,
nanRi !!!
//பன்னி கதை,நாய் கதை எழுத்தாளர் ஒருத்தர் தமிழ்மணத்துல இருக்கார்.அவரோட லிஸ்டுல நீங்களும் சேந்திடாதீங்க.அந்த பதிவுல கப்பு தாங்க முடியலை.பின்னூட்டம் போட ஆள் இல்லாம அனானி பேருல அந்த ஆளே பூந்து பின்னூட்டம் போட்டுக்கறார்
//
:-)))))))))))))))))))))))))))))
அன்புள்ள அய்யா,
தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.
நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.
இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.
தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.
கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.
எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.
சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.
தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.
இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.
கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.
தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?
Post a Comment